கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்டம் (நேரலை)

காணாமல்போன இளைஞனின் சடலம் மீட்பு –சந்தேகம் வெளியிட்டுள்ள உறவினர்கள்

மட்டக்களப்பு,கல்லடி திருச்செந்தூர் பகுதியில் இருந்து காணாமல்போன நபர் இன்று மாலை கல்லடி கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

திருச்செந்தூர் 06ஆம் குறுக்கு சேர்ந்த ஜுலியன் யூட் (32 வயது) என்பவர் 03ம் திகதி காணாமல் வீட்டிலிருந்து சென்றவர் காணாமல்போயிந்தார்.

காணாமல்போனவரை தேடிவந்த உறவினர்கள் நேற்று சனிக்கிழமை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர் .

இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை கல்லடி திருச்செந்தூர் சுனாமி நினைவு தூபிக்கு அருகிலுள்ள கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய நிலையில் சடலமாக  மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் உறவினர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.