மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம் (நேரலை)

உன்னிச்சைகுளத்தில் மூழ்கி பலியான இளைஞன் -சோகத்தில் மட்டக்களப்பு

மட்டக்களப்பு கறுவப்பங்கேணியை சேர்ந்த இளைஞர் ஒருவர் உன்னிச்சைகுளத்தில் நீராடச்சென்ற நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இன்று மாலை இளைஞர்களுடன் நீராடச்சென்றவர் ஆழமான பகுதியில் நீராடியபோது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு,கறுப்பங்கேணி,அம்புறுஸ் வீதியை சேர்ந்த நிஷாந்தன் என்னும் 20வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை ஆயித்தியமலை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.