வேலையற்ற பட்டதாரிகள் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைத்துள்ள கோரிக்கை

வேலையற்ற பட்டதாரிகள் அனைவருக்கும் நியமனம் வழங்கப்படும் என்ற உறுதிமொழியை வழங்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கு இலங்கையில் உள்ள அனைத்து வேலையற்ற பட்டாரிகளும் தமது ஆதரவினை வழங்குவார் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் க.அனிதன் தெரிவித்தார்.

குpழக்கு மாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் இன்று மட்டக்களப்பு காந்திபூங்காவில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்க உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர்.
இதன்போது தற்போது நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டது.

துற்போதைய நிலையில் ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிப்பது தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் தமக்கான சாதகமான உறுதிமொழிகளை ஆதரிப்பது குறித்தும் ஆராயப்பட்டது.

ஆதனை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் க.அனிதன் உட்பட அச்சங்க உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.

இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர்,

ஏலிக்கு மரணம் பூனைக்கு விளையாட்டு என்பதுபோல் பொறுப்பு வாய்ந்தவர்கள் ஒவ்வொரு கதையினை கூறிவருகின்றனர்.போலியான கருத்துகளை தெரிவித்து வேலையற்ற பட்டதாரிகளை உளவியல் ரீதியாக பாதிப்புக்கு உள்ளாக்குகின்றார்கள்.

நூங்கள் தேர்தல் புறக்கணிப்பு தொடர்பில் பல்வேறு தரப்பினரிடமும் பல்வேறு வழிகளில் தெரிவித்திருக்கின்றோம்.அது தொடர்பிலான பதிலை இதுவரையில் யாரும் வழங்கவில்லை.

இந்த நாட்டில் எந்த அரசாங்கம் ஆட்சிக்குவந்தாலும் வேலையற்ற பட்டதாரிகளை புறக்கணிக்கும் வகையிலான செயற்பாடுகளையே தொடர்ந்து முன்னெடுத்துவருகின்றனர்.அதன்காரணமாகவே நாங்கள் தேர்தலை புறக்கணிக்கும் தீர்மானத்தினை எடுத்தோம்.

நூங்கள நாட்டைப்பற்றியோ நாட்டுமக்கள் பற்றியோ சிந்திக்காமல் செயற்படவில்லை.எங்களது தாய்தந்தையின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையிலேயே மிகவும் கஸ்டங்களின் மத்தியில் பட்டப்படிப்பனை பூர்த்திசெய்தோம்.

இலங்கை அரசாங்கத்தின் கீழ் உள்ள அவர்களினால் உருவாக்கப்பட்ட கல்வி செயற்றிட்டத்தின் கீழ் கல்வி நடவடிக்கைகளை பூர்த்திசெய்து ஒரு பட்டதாரியாக வெளிவந்த நிலையில் பொறுப்பு சொல்லவேண்டிய அதிகாரிகள் பட்டதாரிகளை கேவலமான முறையில் பார்க்கவும் பேசும் நிலையும் காணப்படுகின்றது.

ஆதன்காரணமாக இலங்கையில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளின் இரண்டு இலட்சத்து 30ஆயிரம் வாக்குகள் இருக்கின்றது.அனைத்து வாக்குகளையும் இந்த தேர்தலில் புறக்கணிப்பிற்காக பயன்படுத்துவோம்.
புடித்த பட்டதாரிகள் வேலைக்காக போராடிக்கொண்டிருக்கும்போது சாதாரணதரம் உயர்தரம் படித்தவர்களுக்கு தொழில்வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

புட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதில் சில அமைச்சர்களும் முட்டுக்கட்டையாக இருப்பதான தகவல்களும் எங்களுக்கு உறுதியாக கிடைத்துள்ளது.வெளியில் ஒரு மாதிரியாகவும் உள்பகுதியில் ஒரு விதமாகவும் சில அமைச்சர்கள் செயற்பட்டுவருகின்றனர்.நியமனங்களுக்கு பணத்தினைப்பெற்றுக்கொண்டு எங்களை புறந்தள்ளும் செயற்பாடுகளை சிலர் செய்துவருகின்றனர்.இவ்வாறானவர்கள் அடுத்த பாராளுமன்ற தேர்தல் வரும்போது இதன் எதிர்வினைகளை அனுபவிக்கும் நிலையேற்படும்.

வேலையற்ற பட்டாரிகளின் நியமனம் தொடர்பில் இதுவரையில் எந்த ஜனாதிபதி வேட்பாளரும் கருத்து தெரிவிக்கவில்லை.வேலையற்ற பட்டதாரிகளுக்கு காலம் வரையறுக்கப்பட்டு அதற்கு பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படும் என்ற உறுதிமொழியை தரும் வேட்பாளருக்கு இலங்கையில் உள்ள அனைத்து பட்டதாரிகளும் தங்களது ஆதரவினை வழங்குவார்கள் என்றார்.