உறுப்பினர்களின் குற்றச்சாட்டை மறுக்கின்றார் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர்

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளின் அனைத்துவிட்டாரங்களில் சமமான அபிவிருத்திப்பணிகளை மாநகரசபை முன்னெடுத்துவருவதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பு மாநகரசபையில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபையில் எந்த அரசியல் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லையெனவும் மாநகரசபையின் அபிவிருத்திகள் தொடர்பிலேயே பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவம் அவர் தெரிவித்தார்.

பாதீடானது மாநகரசபையின் முழுமையான கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட வருமானத்தின் அடிப்படையிலேயே உருவாக்கப்படுவதாகவும் ஆனால் கிடைக்கும் வருமானத்தினைக்கொண்டே செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மாநகரசபையினால் உறுப்பினர்களுக்கு தனித்தனியாக நிதிகளை ஒதுக்கமுடியாது வட்டார ரீதியாகவே அபிவிருத்திகளை செய்யமுடியும்.சில உறுப்பினாகள் பாராளுமன்ற உறுப்பினர்கள்,அமைச்சுகள் ஊடாக தமது பகுதிக்கான வேலைத்திட்டங்களுக்கு நிதிகளை கொண்டுவந்து அபிவிருத்திகளை செய்யும்போது அதற்கு மாநகரசபை ஆதரவுகளை வழங்குகின்றது.

அதுதவிர மட்டக்களப்பு மாநகரசபையில் எந்தவித அரசியல் ரீதியாக செயற்பாடுகளும் இல்லையெனவும் மாநகர முதல்வர் தெரிவித்தார்.