விசமிகளால் சேதப்படுத்தப்பட்ட ஆலயத்துக்கு ஐந்து இலட்சம் நிதி ஒதுக்கீடு.புணாணை கிழக்கில் பல்லாண்டு காலமாக அமைந்துள்ள இலுக்குப்புல் குளம் ஸ்ரீ விநாயகர் ஆலயம் அண்மைக்காலமாக இனம்தெரியாத நபர்களால் தொடர்ச்சியாக சேதமாக்கப்பட்டு வருகின்றமை தமிழ் இந்துக்களிடையே, இன நல்லுறவை விரும்பும் மக்களின் மனங்களிலும் பெரிதும் வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் கடந்த வாரமளவில்   தமிழரசு கட்சியின் மட்டு வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் ஆலய வளாகம் சிரமாதானம் செய்யப்பட்டு துப்பரவு செய்யப்பட்டது.

இதன் போது கலந்துகொண்டு சிரமதான பணியில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் அவர்களிடத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக முதல் கட்டமாக புதிய ஆலய  நிர்மான வேலைகளுக்காக ஐந்து இலட்சம் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்வதாக குறிப்பிட்டார்.