சஜித்பிரேமதாஸவிடம் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை த.தே.கூட்டமைப்பிடம் கேட்டு வாருங்கள் என்கிறார் ரணில் - எஸ்.வியாழேந்திரன்



(செங்கலடி நிருபர்) 

மட்டக்களப்பு செங்கலடி ஐயங்கேணி ஸ்ரீவெங்கடேஸ்வர மகாவிஸ்ணுமூர்த்தி ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று காலை இடம்பெற்றது. 

ஆலய பிரதமகுருக்கள் தலைமையில் இடம்பெற்ற இந் அடிக்கல் நாட்டுவிழாவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், ஏறாவூர் பற்று பிரதேசசபை தவிசாளர், உறுப்பினர்கள்இ ஏறாவூர் நகரசபை உறுப்பினர்கள் பொதுமக்களென பலர் கலந்துகொண்டிருந்தனர்.  

இதன் போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் விரைவில் இவ் ஸ்ரீவெங்கடேஸ்வர மகாவிஸ்ணுமூர்த்தி ஆலய கட்டுமான பணிக்கான உதவிகளைப்புரிய முயற்சிப்பதாகவும்,  விரைவில் நாம் ஒரு சிறந்த நிலைக்கு வருவோம் அந்நேரம் ஆலயத்திற்கான முழுமையான கட்டுமானத்திற்கான உதவிகளையும் செய்வேன் எனவும் கூறினார். 

தொடர்ந்தும் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்ன  கூறுகின்றாறோ அதைத்தான் சம்மந்தன்ஐயா சம்பந்தப்பட்டவர்கள் செய்வார்கள்  ரணில் விக்கிரமசிங்க அவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் நூறுவீதம் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் யாரை கை காட்டுகின்றாரோ அவருக்குதான் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் இதுதான் உண்மை இதுதான் யதார்த்தம் இதற்கு தழிழ்தேசிய கூட்டமைப்பு கூட்டங்களையும் நடாத்த தேவையில்லை பிரச்சாரங்களை நடாத்த தேவையில்லை. யாருக்கு ஆதரவு என இன்னனும் இன்னும் மக்களை  திசை திருப்ப தேவையற்ற கூட்டங்கயும் பிரச்சாரங்களையும் மேற்கொள்கின்றனர்.

இப்போது பரவலாக இணையத்தளங்களிலும் செய்திகளிலும் காணக்குடியாதாகவுள்ளது ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கூறியுள்ளாராம் சஜித் பிரேமதாஸ அவர்களிடம் சஜித்பிரேமதாஸ அவர்களே நீங்கள் சென்று தமிழ் தேசிய கூட்டமைப்பு யாருக்கு ஆதரவாக உள்ளார்கள் என  கேட்டு வாருங்கள் என்று; ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பிடம்   கேட்டு வாருங்கள் என்று கூறுகியுள்ளார் பிரதமர் அப்படியென்றால் இது என்றால் எப்படி  வகையான திருவிளையாடல்கள் மக்களுக்கு காண்பிக்கிறார்கள் இன்னும் இன்னும் மக்களை முட்டாள்கள் என நினைக்கின்றனர். 

இது தொடர்பாக என்னுடைய நிலைப்பாடு   இந்த நாட்டை இராமண் ஆண்டாரல் சரி இராவணன் ஆண்டாலும் சரி எமது கிழக்கு தமிழரின் இருப்பை பாதுகாக்கக்கூடிய   எமது கிழக்கு தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்யக் கூடிய தேசிய பிரச்சனை இ காணி விடுவிப்புஇ அரசியல் கைதிகள் விடுவிப்புஇ வேலைவாய்ப்புக்கள் , அபிவிருத்தி அனைத்தையும் நிறைவேற்றக்கூடிய ஒருவருக்கு நிபந்தனைகளுடன்  பேசி ஆதரவளிப்போம்.

முஸ்லிம் காங்கிரஸ் கூறுகின்றது வடகிழக்கு  இணைப்புக்கு சம்மதம் இல்லை  என்ன அப்படிப்பட்டவர்களுடன் சேர்ந்து கூட்டு அரசியல் செய்கின்றது தமிழ் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸ் எங்களுடன் சேர்ந்து பயணிக்க வேண்டாம் என்கின்றனர். அப்படி இருந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அவர்களுடன்தான் சேர்கின்றனர்.  எமது தமிழில் ஒரு பழமொழி உள்ளது மதியாதார் தலைவாசல் மிதியாதே என்று இப்படி இருக்கும்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு இவ்வாறு உள்ளது.

கொழும்பிற்கு ஏற்ற போல  வடக்குக் ஏற்ற போல கிழக்கில் அரசியல் செய்ய முடியாது அப்படியென்றால் 70 வருடம் அரசியல் செய்ததன் பிரதிபலன்தான் 58 வீதம் 38 வீதமாக மாறியுள்ளது தழிழர்களின் இருப்பு. தற்போது இங்கு நான் இங்கு பேசிக்கொண்டிருக்கின்ற செங்கலடி ஐயங்கேணியில் இக்கிராமத்தில் இன்னும் 15 வருடத்தில் யார் இருப்பார் என்பதே கேள்விக்குறி நாம் அவதானமாகவும் விழிப்புடனும் இருக்காவிடின் தழிழரின் இருப்பே கேழிவிக்குறியென தொடர்ந்தும் பாராளுமன்ற உறுப்பினர் உரையாற்றினார்.