மட்டக்களப்பு மாவட்டத்தில் 186 மாதிரி கிராமங்கள் அமைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த நான்கு வருடங்களில் 186 மாதிரிக்கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளதுடன் 4359 வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் முகாமையாளர் கே.ஜெகநாதன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாதிரிக்கிராமங்களை அமைப்பதற்கு 2579மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாகவும் இந்த மாதிரி கிராமங்களில் 19 கிராமங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று நடாத்தப்பட்டது.இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் கருத்து தெரிவித்தார்.

வீடமைப்ப அபிவிருத்தி அதிகாரசபையினால் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் வழிகாட்டலின் கீழ் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.இதில் மாதிரிக்கிராம திட்டம் மிகவும் முக்கிய
வீடமைப்பு நிர்மாணத்துறை,கலாசார அமைச்சின் கீழ் தேசிய வீடமைப்பு அபிவிருத்தியினால் 2015ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டுவரையில் 186 மாதிரிக்கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.இவற்றில் 19 மாதிரிக்கிராமங்கள் அமைச்சரினால் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

2015ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 13522 குடும்பங்களுக்காக உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.இதற்காக 3423மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.