கிடைக்கும் உதவிகளைக்கொண்டு சொந்தக்காலில் நில்லுங்கள் -பிரதேச செயலாளார் தயாபரன்

கிராம சக்தி ஊடாக தெரிவுசெய்யப்பட்டவர்கள் தங்களுக்கு கிடைக்கும் உதவிகளைக்கொண்டு சொந்த கால்களில் நிற்கும் நிலமையினை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் என மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு,மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீனவர்களுக்கான வலைகள் மற்றும் தோணிகள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

சத்துருக்கொண்டான் மீன்பிடி திணைக்கள அலுவலகத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் சுதர்சன்,பிரதேச மீன்பிடி திணைக்கள உத்தியோகத்தர்கள்,கிராம சேவையாளர்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் என பலர் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதியின் வறுமையொழிப்பு தேசிய வேலைத்திட்டத்திற்கு இணைவாக கிராம சக்தி வேலைத்திட்டம் ஊடாக இந்த தோணி வலைகள் வழங்கிவைக்கப்பட்டன.

சத்துருக்கொண்டான் பிரதேசத்தினை சேர்ந்த 15 நன்னீர் மீன்பிடியாளர்களுக்கான தோணிகள் மற்றும் 30 மீனவர்களுக்கான வலைகள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.