காத்தான்குடி மர ஆலையில் தீ –விசாரணைகள் மேற்கொள்ளும் பொலிஸார்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதியகாத்தான்குடியில் இன்று அதிகாலை மர ஆலையொன்றில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

இன்று அதிகாலை 2.30மணியளவில் புதியகாத்தான்குடி,பிர்தௌஸ் நகர்,மீன்பிடி அலுவலக வீதியில் உள்ள மர ஆரையிலேயே இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

அதிகாலை ஏற்பட்ட இந்த தீவிபத்தினை தொடர்ந்து மட்டக்களப்பு மாநகரசபையின் தீயணைக்கும் பிரிவினர் ஸ்தலத்திற்கு விரைந்து மேற்கொண்ட தீயணைப்பு நடவடிக்கை காரணமாகவும் பிரதேச மக்களின் ஒத்துழைப்புடனும் தீ ஏனைய பகுதிகளுக்கு பரவாத வகையில் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

இந்த தீவிபத்து என்ன காரணத்தினால் ஏற்பட்டது என்பது தொடர்பில் இதுவரையில் தெரியவில்லையென தெரிவித்த காத்தான்குடி பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த தீவிபத்து காரணமாக அங்கிருந்த மரங்கள் மற்றும் மரம் அரியும் இயந்திரங்கள் முற்றாக அழிந்துள்ளதுடன் இதன் காரணமாக சுமார் ஒரு கோடியே இருபது இலட்சத்திற்கும் மேல் நஸ்டம் ஏற்பட்டுள்ளதாக குறித்த மர ஆலையின் உரிமையாளர் தெரிவித்தார்.

மின் ஒழுக்கு காரணமாகவே இவ்வாறான சம்பவம் இடம்பெறுவதற்கான அதிகளவு வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.