குமாரத்தன் ஆலயத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வு

மட்டக்களப்பு இருதயபுரம் குமாரத்தன் ஆலயமும் இருதயபுரம் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கமும் இணைந்து நடாத்திய உயிர்த்த ஞாயிறு அன்று நடைபெற்ற குண்டுத்தாக்குதலில் உயிர்நீர்த்தவர்களை நினைவுகூரும் நிகழ்வு இன்று மாலை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன்,மாநகரசபை உறுப்பினர்கள்,பௌத்த,இந்து,கிறிஸ்தவ மதகுருமார்கள்,பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது உயிர்நீர்தவர்களை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிடங்கள் மௌன பிரார்த்தனைகள் நடைபெற்றதை தொடர்ந்து நினைவுரைகள் நடைபெற்று இறுதியான உயிர்நீர்த்தவர்களின் ஆத்மசாந்திக்காக உயிர்நீர்த்தவர்களின் படங்களுக்கு முன்பாக ஈகச்சுடர் ஏற்றப்பட்டு நினைவு அனுஸ்டிக்கப்பட்டது.

கிறிஸ்தவ சபையில் உயிர்நீர்த்த உறவுகளை நினைவுகூருவதற்கான நடவடிக்கையினை இந்து ஆலயங்கள் முன்னெடுத்துவருவது சிறந்த மத ஐக்கியத்திற்கு வழியேற்படுத்தும் என இங்கு தெரிவிக்கப்பட்டது.