மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் உயிர்நீர்த்தவர்களுக்கான நினைவேந்தல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று இன்றுடன் ஒரு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அத்தாக்குதலில் உயிர்நீர்த்தவர்களை நினைவுகூரும் நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை முதல் உணர்வுபூர்வமாக நடைபெற்றுவருகின்றது.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இன்று மாலை நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம்.தயாபரன் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி சுபா சதாகரன்,உதவி திட்டமிடல் பணிப்பாளர் சுதர்சன் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது சியோன் தேவாலயத்தில் உயிர்நீர்த்த 29பேர் மற்றும் இலங்கையின் பல பாகங்களிலும் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் உயிர்நீர்த்தவர்களுக்கு ஆத்மசாந்திவேண்டி மௌன பிரார்த்தனை செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து உயிர்நீர்த்தவர்களின் நினைவாக ஈகச்சுடர் ஏற்றப்பட்டு நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது.