உயிர்நீர்த்தவர்களுக்கு ஆத்மசாந்திவேண்டிய மாமாங்கேஸ்வரர்

உயிர்த்த ஞாயிறு அன்று மட்டக்களப்பு உட்பட நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் உயிர்நீர்த்தவர்களின் ஆத்மசாந்தி வேண்டி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் இன்று பகல் முன்னெடுக்கப்பட்டன.

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் உட்பட நாட்டின் பல பாகங்களிலும் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் உயிர்நீர்த்தவர்களுக்கு ஆத்மசாந்திவேண்டியும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் விசேட பூஜைகள் நடாத்தப்பட்டன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று இன்றுடன் ஒரு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அத்தாக்குதலில் உயிர்நீர்த்தவர்களை நினைவுகூரும் வகையில் இந்த வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் இந்த பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டதுடன் உயிர்நீர்த்தவர்களின் ஆத்மசாந்திக்காக ஆத்மசாந்தி அர்ச்சனையும் செய்யப்பட்டது.

பூஜையினை தொடர்ந்து கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஆலய முன்றிலில் அன்னதான நிகழ்வொன்றும் முன்னெடுக்கப்பட்டது.

இந்த வழிபாடுகளில் கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள்,உயிர்நீர்த்தவர்களின் உறவினர்கள்,பொதுமக்கள்,வெளிநாட்டு பிரஜைகள் என பலர் கலந்துகொண்டனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த பயங்கரவாதத்தினை கட்டுப்படுத்துவதற்கு பொறிமுறையொன்றினை ஏற்படுத்தி அரசாங்க நடவடிக்கைளை முன்னெடுக்கவேண்டும் என சிரேஸ்ட சட்டத்தரணியும் கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் தலைவருமான கே.சிவநாதன் வேண்டுகோள்விடுத்தார்.

இந்த நாட்டினை அனைவரும் ஒன்றிணைந்து கட்டியெழுப்பவேண்டிய கடப்பாடு அனைவருக்கும் உள்ளதாக கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் செயலாளரும் வைத்திய  நிபுணருமான கே.அருளானந்தம் தெரிவித்தார்.