சோகமயமான காந்திபூங்கா -31வது நீங்காத வடு நினைவுகூரப்பட்டது

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாங்குதலில் உயிர்நீர்த்தவர்களை நினைவுகூரும் வகையில் மாபெரும் நடைபவனியொன்று இன்று மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து ஆரம்பமான இந்த நினைவேந்தல் நடைபவனியானது மட்டக்களப்பு  காந்திபூங்காவில் வரையில் நடைபெற்றது.

இலங்கை உளவியல் மய்யத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த பவனியில் சர்வமத தலைவர்கள்,இளைஞர்கள்,யுவதிகள்,சமூக செயற்பாட்டாளர்கள் என நூற்றுக்கணக்கானோர் இந்த நடைபவனியில் பங்குகொண்டனர்.

நடைபவனியானது மட்டக்களப்பு காந்திபூங்காவினை வந்தடைந்ததும் அங்கு ஆயிரக்கான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் உயிநீர்த்தவர்களின் 31வது நாள் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வர் ஏ.தேவதாசன்,மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர்,சர்வமத ஒன்றியத்தினை சேர்ந்த சிவஸ்ரீ சிவபாதம் குருக்கள் உட்பட அருட்தந்தையர்கள்,இந்து மதகுருமார்கள்,பௌத்த மதகுருமார்கள் இதில் கலந்துகொண்டனர்.

இதன்போது முதல் சுடரினை மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் பிரதம போதகர் ரொசன் மகேசனால் முதல் சுடர் ஏற்றப்பட்டு நினைவேந்தல் ஆரம்பித்துவைக்கப்பட்டது.அதனை தொடர்ந்து மதகுருமார்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள்,அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஈகச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

இன்று மாலை நடைபெற்ற அஞ்சலி நிகழ்வின்போது காந்திபூங்கா சோகமயதாக கண்ணீரில் கரைந்தமை குறிப்பிடத்தக்கது.