கோவில்போரதீவில் சாதாரண தர மாணவர்களுக்கு தொடர் கருத்தரங்கு


மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுபற்று பிரதேச செயலகப்பிரிவிலிருந்து இருந்து  கா.பொ.த.சாதாரணதர  2026 பரீட்சையில் தோற்ற உள்ள மாணவர்களுக்கான இலவச கல்விக் கருத்தரங்கு கோவில்போரதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் அறநெறிபாடசாலை ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

போரதீவுபற்று பிரதேசசபையின் கோவில்போரதீவு வட்டார உறுப்பினர் ம.கோபிநாத் தலைமையில் இன்று ஸ்ரீ கண்ணகி அம்மன் அன்னதான மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதில் தமிழ்,விஞ்ஞானம்,கணிதம்,வரலாறு ஆகிய பாடங்கள் ஆரம்பித்துவைக்கப்பட்டன. கல்விக் கருத்தரங்கானது தைமாதம் 11,12,13 ஆகிய தினங்களில் காலை 8.30 தொடக்கம் பி.ப 12.30மணி வரைக்கும் நடைபெறவுள்ளது.

இதில் விசேட தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களால் சிறப்பிக்கும் கல்விக் கருத்தரங்கு முற்றிலும் இலவசமாக  தொடர்ந்து மூன்று தினங்கள் நடைபெற உள்ளது.

மேற்படி நிகழ்வில் கோவில் போரதீவு கிராம சமூக சேவையாளர் மார்க்கண்டு பரநிருபசிங்கம், மற்றும் போரதீவு பற்று பிரதேச சபை உறுப்பினர்கள், கல்வி கருத்தரங்கை சிறப்பிக்கும் ஆசிரியர்கள், ஸ்ரீ  கண்ணகி அம்மன் அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து சிறப்பித்தனர்.