தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

இலங்கையின் இறுதி யுத்தத்தில் உயிர்நீர்த்தவர்களை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் வடகிழக்கில் இன்று உணர்வுபூர்வமாக நடைபெற்றுவருகின்றன.

10வது ஆண்டினை நினைவாகக்கொண்டு இந்த ஆண்டு வடகிழக்கின் பல பாகங்களிலும் பொது அமைப்புகளினாலும் அரசியல் கட்சிகளினாலும்

நினைவேந்தல் அனுஸ்டிக்கப்படுகின்றது.மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இன்று காலை முதல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடைபெற்றுவருகின்றன.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இன்று காலை மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்;டில் ஆரையம்பதி ஸ்ரீசித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் இன்று நண்பகல் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.காலை ஆரையம்பதி புனித குழந்தை திரேசா ஆலயத்தில் காலை விசேட பிரார்த்தனைகள் நடைபெற்றதை தொடர்ந்து ஆரையம்பதி ஸ்ரீசித்திரவேலாயுத

சுவாமி  நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.ஆலயத்தில் விசேட பஜனைகள் மற்றும் அபிசேகங்கள் நடைபெற்று விசேட பூஜைகள் நடைபெற்றது.அதனைத்தொடர்ந்து ஆலய முன்றிலில் ஈகச்சுடர்

ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து உயிர்நீர்த்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.நினைவேந்தலை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வானது இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் நடைபெற்றதுடன் இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்,முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், தவிசாளர்கள், உறுப்பினர்கள்,கட்சி ஆதரவாளர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.