மட்டக்களப்பு நகரில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடைபெற்றுவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியம்,மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு ஊடகவியலாளர் நினைவுத்தூபியருகே நேற்று மாலை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அருட்தந்தையர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,ஊடகவியலாளர்கள்,சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து மதத்தலைவர்களின் பிரார்த்தனைகள் நடைபெற்றதை தொடர்ந்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வர் ஏ.தேவதாசன்,மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன்,மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் எஸ்.நிலாந்தன் ஆகியோர் நினைவுரையாற்றினர்.