மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி

மகா சிவராத்திரியை முன்னிட்டு கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றன.

இன்று மாலை தொடக்கம் விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்றுவருகின்றன.

நாளை அதிகாலை வரையில் நான்கு சாம பூஜைகள் நடைபெறவுள்ளது.

இதேநேரம் மாமாங்கேஸ்வரர் கல்வி அபிவிருத்தி நிதியம் மாமாங்கேஸ்வரர் அறநெறி பாடசாலை இணைந்து நடாத்திய கலை நிகழ்வுகள் இன்று மாலை ஆலய முன்றிலில் நடைபெற்றன.

இன்றைய சிவராத்திரி வழிபாடுகளில் நாடெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் ஆலயத்திற்கு வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.