பெரியகல்லாறு அருள்மிகு சர்வார்த்த ஶ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான மகோற்ஷப விஞ்ஞாபனம் - 2019

கிழக்கிலங்கையில் மட்டுமாநகரின் தென்பால் ஆயகலைகள் அறுபத்து நான்கும் அழிவிலா புகழ் கொள் சைவ நெறியும் மிகுந்து விளங்கும் கல்வியாறு எனும் புனைப் பெயர் கொண்ட பெரியகல்லாறு எனும் திவ்யபதியினிலே கோயில் கொண்டு எழுந்தருளி வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் அருளிக்கொண்டிருக்கும் கல்லாற்றுப் பிள்ளையார் என்ற நாமம் தாங்கிய ஶ்ரீ சித்தி விநாயப் பெருமானுக்கு நிகழும் விளம்பி வருடம் மாசித் திங்கள் 23ம் நாள் (07/03/2019) வியாழக்கிழமை முற்பகல் 11:00 மணி சுபாசுப வேளையில் துவாஜாரோகணம் (கொடியேற்றம்) நிகழ இறையருள் கைகூடியுள்ளது. அதனைத் தொடர்ந்து 12 நாட்களுக்கு காலை,மாலை விசேட உற்சபமும் 20.03.2019 புதன்கிழமை மாலை தேரோட்டமும் 21.03.2019 வியாழக்கிழமை காலை பங்குனி உத்தர நட்ச்சத்திரத்தில் தீற்தோற்சபமும் நடைபெறும்.


                   கிரியா கால விபரம்

06/03/2019 புதன்கிழமை : மாலை04:00 மணியில் இருந்து ச்ருமாரம்பம் ,விநாயகர் வழிபாடு ,அனுக்ஞை ,கிராம சாந்தி ,வாஸ்துசாந்தி,பிரவேசபலி,மிருத் சங்கிரணம் மற்றும் பூர்வாங்கக் கிரியைகள் இடம் மெறும்.

07/03/2019 வியாழக்கிழமை : காலை 08:00 மணிக்கு துவாஜாரோகணக் கிரியைகளும் பகல் 11:00 மணிக்கு கொடியேற்றமும் இடம் பெற்று அதனைத் தொடர்ந்து திரு..முரளி (K.D.M Welding Shop)அவர்களின் அனுசரணையில் அன்னதானம் இடம் பெறும்.மாலை 05:00 மணிக்கு யாகம்,தம்ப அபிசேகம் நடைபெற்று தொடர்ந்து பூசை முடிவுற்றதும் சுவாமி உள்வீதி வலம் வருவார்.


உற்சப காலங்களில் தினமும் காலை 08:30 மணிக்கு ஸ்நபன ஆரம்பம் ,09:00 மணிக்கு பூசை ஆரம்பம் ,10:00 மணிக்கு தம்ப பூசை ,11:15மணிக்கு வசந்தமண்டப பூசையை தொடர்ந்து பகல் திருவிழா நல்டைபெற்று நிறைவு பெறும். மாலை 05:00மணிக்கு பஜனை ,தம்ப பூசை ,நற்சிட்ந்தனையைத் தொடர்ந்து 08:00 மணிக்கு வசந்த மண்டப பூசை நடைபெற்று சுவாமி உள்வீதி வருதல் வழமைபோல் இடம் பெற்று இரவுத்திருவிழா நிறைவுபெறும்.

20/03/2019 புதன்கிழமை : பிற்பகல் 04:00 மணிக்கு தேரோட்டமும் இடம் பெறும்

21/03/2019 வியாழக்கிழமை : அதிகாலை 04:00 மணிக்கு திருபொற்சுண்ணம் ,காலை சமுத்திர தீற்தோற்சபம்,பொன்னுஞ்சல் அதனை தொடர்ந்து ஒப்பந்தக்காரர் .விஜயகுமாரன் (பிறிமியர்) அவர்களின் அனுசரணையில் அன்னதானம் இடம் பெறும் .மாலை 06:00மணி முதல் துவஜா அவரோகணம் (கொடி இறக்கம்),சந்தி விசர்ச்சனமும்,சண்டேஸ்வரர் உற்சபமும் நடைபெறும்.

22/03/2019 வெள்ளிக்கிழமை : காலை 09:00 மணிக்கு சங்காபிசேகமும் மாலை06:00 மணிக்கு பூங்காவனமும் இடம் பெறும்.


23/03/2019 சனிக்கிழமை : காலை 10:00மணிக்கு பிராய்ச்சித்த அபிசேகமும்,மாலை 06:00மணிக்கு பூசையும் இடம் பெற்று எம்பெருமானுடைய மகோற்சப விழாக்கள் அனைத்தும் இனிதே நிறைவு பெறும்.