மாவீரர் நினைவேந்தலை கோரி பணம் அறவீடு

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவீரர்கள் நினைவேந்தலுக்கு என பணம் வசூலிக்கும் குழு தொடர்பில் அவதான இருக்குமாறு கோரப்பட்டுள்ளது.

சில தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பகுதியில் சிலர் இவ்வாறு மாவீரர் நினைவேந்தலுக்கென பணம் வசூலிப்பில் ஈடுபடுவதாகவும் அவ்வாறானவர்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமர்று மாவீரர் தின ஏற்பாட்டுக்குழுவினர் அறிவுறுத்தியுள்ளனர்.

எந்தவித பண வசூலிப்பினையும் செய்யுமாறு கோரப்படவில்லையெனவும் சிலர் தங்களது சொந்த தேவைக்காக மாவீரர் தின நிகழ்வினை பயன்படுத்தமுனைவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.