மாநகர சபையினால் குழந்தைகளுக்கான போசாக்கு உணவு வழங்கும் திட்டம்


(லியோன்)

மட்டக்களப்பு மாநகர முதல்வர் மற்றும் மாநகர ஆணையாளர் ஆகியோரினால் ஆலோனைக்கு அமைய மாநகர சபையின் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி வேலைத்திட்டங்களில்  மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட  வரிய குடும்பங்களின்  குழந்தைகளின் போசாக்கினை மேம்படுத்தும் வகையில் குழந்தைகளுக்கான போசாக்கு உலர்வுணவு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன


இதற்கு அமைய மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் வாழ்கின்ற குடும்பங்களில் தெரிவு  செய்யப்பட வரிய  குடும்பங்களில்  உள்ள குழந்தைகளுக்கான போசாக்கு உலர்வுணவு  பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி கிரிசுதன் தலைமையில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக மாநகர பதில் முதல்வரும் ,பிரதி முதல்வருமான  கந்தசாமி .சத்தியசீலன் ,மாநகர ஆணையாளர் கே .சித்திரவேல் , பிரதி ஆணையாளர் என் .தனஞ்சயன்  மற்றும் பொதுசுகாதார தாதிய சகோதரி திருமதி . ராஜவதி பயஸ் ஆனந்தராஜா ,மாநகர சுகாதார கிளைத் தலைவர் எஸ் .பத்மாவதி  ஆகியோர் கலந்துகொண்டனர்