கர்ப்பிணி பெண் உத்தியோகத்தரை தரக்குறைவாகப் பேசி அடாவடித்தனம்

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொடுவாமடு கமநலசேவை நிலையத்தில் புகுந்து கர்ப்பிணி பெண் உத்தியோகத்தரை தரக்குறைவாகப் பேசி அடாவடித்தனச்செயற்பாடுசெய்தவர் நடவடிக்கையெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கான உரமானியம் பெறுவதற்கான பற்றுச்சீட்டு குறித்த நிலையத்தின் பெண் உத்தியோகத்தரால் விநியோகிக்கபட்டிருந்த நிலையில் நேற்று பி.ப  2.15 மணியளவில் திடீரென உட்புகுந்த நபர் அங்கு பற்றுச்சீட்டு பெற வரிசைப்படி நின்றவர்களை தாண்டிச்சென்று  உத்தியோகத்தரிடம் தமக்கு முதலில் வழங்குமாறு கோரியுள்ளார்.

சிறிது நேரம் அமர்ந்திருக்குமாறும் தாம் இன்னமும் மதிய உணவு உட்கொள்ளவில்லை நான் ஒரு கர்ப்பிணி உடல் நிலை இயலாமல் உள்ளது சாப்பிட்டுவிட்டு வருகிறேன் எனக் கூறியுள்ளார்.

இதற்கு அந் நபர் முதலில் எனது வேலையை முடியுங்கள் நான் யார் என்று தெரியுமா? நான் ஏறாவூர் பிரதேசசெயலக உத்தியோகத்தர் முதலில் எனக்கு வேலையை முடித்துவிட்டுசாப்பிட செல்லுங்கள் என தகாத வார்த்தைப் பிரியோகத்தை பிரயோகித்து கர்ப்பிணி உத்தியோகத்தர் மீது; அவரின் கையில் இருந்த பற்றுசீட்டுபெறும் ஆவணங்களை முகத்தில் வீசிஎறிந்துள்ளார்.

இச் சம்பவம் அங்கு பெரும் பரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் சம்பவத்தை அடுத்து உத்தியோகத்தர் இவரின்செயற்பாட்டையடுத்து உடல்நிலை இயலாமல்  அழுதுகொண்டிருக்கும் போது ஏறாவூரைச் சேர்ந்த குறித்த நபர் மீண்டும் உடனடியாக தமக்கு பற்றுச்சீட்டு வழங்குமாறு கோரியுள்ளார்;.

எனக்கு இப்படி செய்த உங்களுக்கு பற்றுச்சீட்டு வழங்க முடியாது வரிசைப்படி வாருங்கள் எனக்கூறியுள்ளார். பின் அங்கு பற்றுச்சீட்டு பெறவந்தவர்கள் அவரை வெளியனுப்பிள்ளனர். இச் சமபவம் இவ்விடத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு முறையற்ற வகையில் நடந்துகொண்டவர் மீது முறையான நடவடிக்கையெடுக்குமாறு குறித்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.