பாகிஸ்தான் விசேட பிரதிநிதி மட்டக்களப்பு விஜயம்.

(சசி துறையூர்)



இலங்கை ஐக்கிய நாடுகள் நட்புறவு சங்கத்தினதும்,
இலங்கை நிலையான அபிவிருத்தி இலக்கு இளைஞர் வலையமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் மனோகரன் சுரேஸ்காந்தன்  அவா்களின் அழைப்பை ஏற்றும் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இரண்டு நாள் விஜயமாக கடந்த 08.08.2018 புதன் கிழமை  மட்டக்களப்பிற்கு வருகை தந்தார் சர்வதேச சமாதான செயற்பாட்டாளரும், பாக்கிஸ்தான் நாட்டின் இளைஞர் மன்றத்தின் தலைவருமான அத்தீக் ராஜா.

  இந்த சுற்றுப் பயணத்தின் போது பாகிஸ்தான் நாட்டில் இளைஞர் அபிவிருத்தி மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகள்  தொடர்பாக முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் இலங்கையில் நிலையான அபிவிருத்தி இலக்குகள் ,இளைஞர் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.

மேலும் மட்டக்களப்பு மாநகர மேயர் கெளரவ T.சரவணபவன் அவர்களை சந்தித்தும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடியிருந்தார்.

 தொடர்ந்து தொழில் பயிற்சி நிலையங்களுக்கு விஜயம் செய்து சமாதானம் மற்றும் ஆளுமை விருத்தி தொடர்பாக கலந்துரையாடியிருந்தார் இவர்.

 பின் கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்களுக்கு சமாதானம் மற்றும் இளைஞர்களின் பங்கு எனும் தலைப்பில் விரிவுரையினை நிகழ்த்தியிருந்தார்.

அதன் பின்னர் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரதி உப வேந்தர் Dr.K.E,கருணாகரன் அவர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.

இவரது வருகையை கௌரவிக்கும் முகமாக மாவட்ட தலைவர் மற்றும் பிரதேச இணைப்பாளர்களால் நினைவு சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வுகளில் கோரளை பற்று பிரதேச இணைப்பாளர் அருளேந்திரன் வினோத், கோரளை பற்று தெற்கு  பிரதேச இணைப்பாளர் கோவிந்தன் தினேந்திரன், கோரளை பற்று மேற்கு  பிரதேச இணைப்பாளர் M.H.அஷிம், மண்முனை பற்று   பிரதேச இணைப்பாளர் மதிசுதன் பரியங்கன், மண்முனை மேற்கு   பிரதேச இணைப்பாளர் தரிஷிகா அருள்நாயகம், காத்தன்குடி  பிரதேச இணைப்பாளர் M.M.M.றிப்கி, மண்முனை தென் எருவில் பற்று   பிரதேச இணைப்பாளர் போல் ஜேசுகுமார் அன்று, ஏறாவுர் பற்று பிரதேச இணைப்பாளர் நமசிவாயம் திவாகர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க சுற்றுளாத்தளங்களை பார்வையிட்டிருந்தார். அத்துடன் மாவட்டத்தின் உயர் மட்ட பிரதிநிதிகளை சந்தித்ததுடன் பல கல்வி நிலையங்களுக்கும் பயணம் செய்திருந்தார்.

இரண்டு நாள் மட்டக்களப்பு விஜயத்தை முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பிய பாக்கிஸ்தான் நாட்டின் இளைஞர் மன்றத்தின் தலைவரான அத்தீக் ராஜா நாளை 12.08.2018 பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள சர்வதேச இளைஞர் தின நிகழ்வுகளில் கலந்து கொண்டு தனது தாய் நாடு திரும்பவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.