மல்யுத்த போட்டியில் தங்க பதக்கம் வென்ற இந்து கல்லூரி மாணவன்


(லியோன்)

அகில இலங்கை ரீதியில்
நடத்தப்பட்ட  மல்யுத்த போட்டியில் தங்க பதக்கம் வென்ற மட்டக்களப்பு இந்து கல்லூரி  மாணவனை கௌரவிக்கும் நிகழ்வு  மட்டக்களப்பில் நடைபெற்றது

கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையில்  நடைபெற்ற அகில இலங்கை ரீதியிலான   பாடசாலைகளுக்கிடையில்  நடத்தப்பட்ட  மல்யுத்த  போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தை  பிரதிநிதித்துவ படுத்தி  கலந்து கொண்ட மட்டக்களப்பு இந்து  கல்லூரி முதல் இடத்தினை பெற்றுள்ளது  

மட்டக்களப்பு மாவட்ட கல்வி வலயங்களில்  இருந்து கலந்துகொண்ட பாடசாலைகளில் மட்டக்களப்பு கல்வி வலயத்தின்   மட்டக்களப்பு இந்து கல்லூரியில்  இருந்து 20 வயத்துக்குதப்பட்ட  ஆண்கள்  பிரிவில்  65-70  கிலோ நிறை மல்யுத்த போட்டியில் கலந்துகொண்ட இந்து கல்லூரி மாணவன் கிருஷ்ணகுமார் மிதுலாஷன் போட்டியில் வெற்றிப்பெற்று   அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தினை பெற்று தங்க பதக்கத்தினை பெற்றுள்ளார்  

அகில இலங்கை ரீதியில்  கலந்துகொண்ட பாடசாலைகளுக்கிடையில்  வெற்றிபெற்று  மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் , கல்வி வலயத்திற்கும் ,பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளனர் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரியில்  நடைபெற்றது .

கல்லூரி  அதிபர் சண்டேஸ்வர சர்மா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலய உடல்கல்வி உதவிக் கல்விப்பணிப்பாளர் ,வி .லவக்குமார் , மட்டக்களப்பு கல்வி வலய கல்வி அபிவிருத்தி  உதவி கல்விப்பணிப்பாளர்  திருமதி . டி .உதயகரன்  மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் ,மாணவர்கள், மாணவனின் பெற்றோர்  கலந்துகொண்டனர்

இதேவேளை கபடி போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்ற  கபடி குழு மாணவர்களுக்கும் , விளையாட்டுக்காக முழு நேரத்தையும் அர்பணித்து , நுட்பமான பயிற்சிகளை வழங்கி மாணவர்களை பயிற்றுவித்து பாடசாலைகளுக்கிடையே நடைபெறும் தேசிய மட்டத்தின் மல்யுத்த போட்டிகளில் வெற்றிபெற செய்த  மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்தமைக்காக வி . திருச்செல்வம் ஆசிரியரை பாராட்டி கௌரவித்து  விருதுகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது