நீச்சல் தடாக வாழ்க்கை பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி பட்டறை


(லியோன்)
நீரியல் மற்றும் நீச்சல் தடாக வாழ்க்கை பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி பட்டறையின் ஆரம்ப நிகழ்வு (
01)  மட்டக்களப்பில் நடைபெற்றது .


அவுஸ்ரேலியா  அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ்  திறன் அபிவிருத்தி அமைச்சின் உள்வாங்கப்பட்ட வளர்ச்சிக்கான திறன்  நிகழ்ச்சி திட்டத்துடன் பெறன்டினா நிறுவனம் இணைந்து  உல்லாசப்பயண துறை ஊக்குவிப்பு திட்டத்தினை  நடைமுறைப்படுத்தப்படுகின்றது

இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களுக்கான  வேலைவாய்ப்பினை பெற்றுகொடுக்கும் நோக்குடன் சிறிலங்கா லைப் செர்விஸ் பெடரேஷன் நிறுவனத்தினால் நீரியல் மற்றும் நீச்சல் தடாக வாழ்க்கை பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன

மட்டக்களப்பில் மூன்று நாள் நடைபெறவுள்ள நீரியல் மற்றும் நீச்சல் தடாக வாழ்க்கை பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி பட்டறையின் ஆரம்ப முதல் நாள் நிகழ்வு மட்டக்களப்பு வெபர் மைதான உள்ளக அரங்கில்  நடைபெற்றது

இந்நிகழ்வில் மாநகர ஆணையாளர் என் .மணிவண்ணன் , திறன் அபிவிருத்தி அமைச்சின் மாவட்ட இணைப்பாளர் திருமதி . மரினா உமேஷ் , மட்டக்களப்பு மாவட்ட பெறன்டினா நிறுவன  முகாமையாளர் . எஸ் .தினேஷ் ,, மாநகர சபை உத்தியோகத்தர் எஸ். பிரதீபன் , மற்றும் நீச்சல் தடாக வாழ்க்கை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் , மாநகரசபை உத்தியோகத்தர்கள் ,ஊழியர்கள் ,கலந்துகொண்டனர்
இந்த பயிற்சி பட்டறையில் பயிற்றுவிப்பாளர்களாக  சிறிலங்கா லைப் செர்விஸ் பெடரேஷன் நிறுவன கயான் பிரியாதர்ஷன , பி டி  வி எஸ் சமன் குமார ஆகியோர் பயிற்றுவிப்பாளர்களாக கலந்துகொண்டனர்