கிராம சக்தி மற்றும் கம்பெரலிய செயற்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்



(லியோன்)


கிராம சக்தி மக்கள் செயற்திட்டம் மற்றும் கம்பெரலிய தொடர்பாக விளக்கமளிக்கும் கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது


2017  வறுமையை இல்லாதொழிக்கும் ஆண்டு தைரியமாகவும் ,உறுதியாகவும் , முறையாகவும்  ஒன்றிணைந்து வறுமையிலிருந்து விடுபட்டு முன்னேற்றப் பாதையை அணுகியுள்ள இலங்கை மக்கள் எனும் வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலக மட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாக பிரதேச செயலாளர்கள் மற்றும் திட்டமிடல்  பணிப்பாளர்களுக்கிடையில் விளக்கமளிக்கும் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது .

மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் தலைமையில்   நடைபெற்ற மாவட்ட  வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலின் போது 2017  ஆம் ஆண்டு கிராம சக்தி திட்டத்தின் கீழ்  14 பிரதேச செயலக மட்டத்தில் தெரிவு செய்யப்பட 42  கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கும் தலா ஒரு மில்லியன் வீதம் ஒரு பிரதேச செயலாளர்பிரிவுக்கும் மூன்று மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கிராம அபிவிருத்தி திட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்படும் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன .

இந்த கிராம சக்தி மக்கள் செயற்திட்டம் மற்றும் கம்பெரலிய தொடர்பாக மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விளக்கமளிக்கும் கலந்துரையாடல் நிகழ்வில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி . சசிகலா  புண்ணியமூர்த்தி  மற்றும் மாவட்ட செயலக  உத்தியோகத்தர்கள் , மட்டக்களப்பு மாவட்ட 14 பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர்கள் கலந்துகொண்டனர்