தரவை அம்புமுனை குளம் புனரமைப்புக்கான அடிகள் நாட்டும் நிகழ்வு


(லியோன்)

மட்டக்களப்பு மாவட்டம் கிரான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட  தரவை அம்புமுனை குளம் புனரமைப்புக்கான அடிகள் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது 



நிலையான அபிவிருத்தி வன ஜீவராசிகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சசின் செயலாளர் எ .பி .ஜி . கித்சிறியின்  ஆலோசனையின்  கீழ் நிலையான அபிவிருத்தி வன ஜீவராசிகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல் மார்சல் சரத் பொன்சேகாவின்   பணிப்புரைக்கு அமைய கிரான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட  தரவை , அம்புமுனை பகுதியில்    குளம் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நிலையான அபிவிருத்தி வன ஜீவராசிகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி  அமைச்சின்  30  மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மாவட்ட   கமநல அபிவிருத்தி திணைக்களத்தின்   மேற்பார்வையின் கீழ் குளம் புனரமைக்கப்படவுள்ளது

இதற்கான  முதல் கட்ட  நிதியாக  15 மில்லயன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அம்புமுனை குலத்தின் அனைக்கட்டுக்கான ஆரம்ப பணிகள் ஆரம்பிக்கப்பட்டு  அதற்கான அடிகள் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது  

மாவட்ட  கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் நடராஜா சிவலிங்கம் தலைமையில் இன்று நடைபெற்ற அம்புமுனை குளத்தின் அனைக்கட்டுக்கான அடிகள்  நாட்டும் நிகழ்வில்  மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார்  உட்பட  நிலையான அபிவிருத்தி வன ஜீவராசிகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சசின் மேலதிக செயலாளர் நெவில் பத்மசிரி ,கிழக்குமாகாண நிலையான அபிவிருத்தி வன ஜீவராசிகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி பிரதி பணிப்பாளர் தீபால் அல்விஸ் , முன்னாள் கிழக்குமாகாண விவசாய அமைச்சர் கே .துரைராஜசிங்கம் ,கிரான் பிரதேச செயலாளர் .ராஜ்பாபு , தரவை  இராணுவ படை பிரிவு லெப்டிநெல் கேணல் நிமால் ஜெயகொடி , மாவட்ட செயலக அதிகாரிகள் மற்றும் கிரான் பிரதேச தரவை , அம்புமுனை பகுதி விவசாயிகள் கலந்துகொண்டனர்


இந்த குளம் புனரமைப்பதன் ஊடாக சுமார் 3000 ஆயிரம் விவசாய நிலங்கள் , 1500  விவசாயிகள் ,நன்மை அடைவதோடு , நன்னீர் மீன் உற்பத்தி , கால்நடை வளர்ப்பு , உபஉணவு உற்பத்தி ,  மக்களுக்கான குடிநீர் வசதி மற்றும் காட்டு விலங்குகளுக்கான நீர் வசதி போன்ற விடயங்கள் இந்த குளதின்னுடாக நன்மை அடைய கூடும் என மாவட்ட  கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் நடராஜா சிவலிங்கம் தெரிவித்தார்