இணைந்த கரங்கள் சமூக சேவைகள் அமைப்பின் ஒரு வருட நிறைவு நிகழ்வு


 (லியோன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட புதுநகர் , திமிலைத்தீவு , சேற்றுக்குடா , வலையிறவு  , வீச்சுக்கல்முனை  ஆகிய ஐந்து கிராமங்களை உள்ளடக்கிய இணைந்த கரங்கள் சமூக சேவைகள் அமைப்பும் தொழிலுக்காக புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வாழும்  இணைந்த கரங்கள் சமூக சேவைகள் அமைப்பும் இணைந்து செயல்படுகின்ற  அமைப்பின் ஒரு வருட நிறைவினை சிறப்பிக்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது


மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட புதுநகர் , திமிலைத்தீவு , சேற்றுக்குடா , வலையிறவு  , வீச்சுக்கல்முனை ஆகிய ஐந்து கிராமங்களை உள்ளடக்கிய இணைந்த கரங்கள் சமூக சேவைகள் அமைப்பானது தமது கிராம சேவை பிரிவுகளில் சமூக பணிகளாக  பல வாழ்வாதார உதவிகள் , பாடசாலை மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளுக்கான  உதவிகள்  மற்றும் விளையாட்டு துறைகளை ஊக்குவிக்கும் செயல்பாடுகளை முன்னெடுக்கும் விதத்தில் நிதி உதவிகள்  வழங்கி சமூக பணிகளை முன்னெடுத்து வருகின்றது .

இதன் கீழ்  தமது இணைந்த கரங்கள் சமூக சேவைகள் அமைப்பின் ஒரு வருட நிறைவினை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் ஓசானம் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான மதிய நேர உணவுகள் மற்றும் அவர்களுக்கான விளையாட்டு பொருட்கள் வழங்கி ஒருவருட நிகழ்வு கொண்டாடப்பட்டது  .

அமைப்பின் தகைவரும்  கிராம சேவை உத்தியோகத்தருமான  கே . ஜெயந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  இணைந்த கரங்கள் சமூக சேவைகள் அமைப்பின்  உறுப்பினர்கள் ,  ஓசானம் விசேட தேவையுடைய பிள்ளைகளின்  நிலைய தலைமை  அருட்சகோதரி , நிலைய உதவியாளர்கள் கலந்துகொண்டனர்