போதை வஸ்து அற்ற சிறந்த உடல் ஆரோக்கியமான ஒரு சமூகத்தை வளர்த்து எடுக்க வேண்டும்


(லியோன்)

போதை வஸ்து அற்ற ஒரு சமூகமாகவும் , சிறந்த உடல் ஆரோக்கியமான சமூகமாகவும் எமது சமூகத்தை வளர்த்து எடுக்க வேண்டும் என்ற நோக்கில் தேசிய உடல் ஆரோக்கிய வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார் . 

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தேசிய உடல் ஆரோக்கிய  வாரத்தை முன்னிட்டு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான  ஏரோபிக் “உடல் அப்பியாச செயல்பாடுகள் இன்று இடம்பெற்றன


மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்த ஏரோபிக் “உடல் அப்பியாச செயல்பாட்டு நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் உரையாற்றுகையில் இந்த உடல் ஆரோக்கியம் வாரம் என்ற அடிப்படியிலே மே மாதம் 21 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.

இந்த ஏரோபிக் என்கின்ற உடல் ஆரோக்கிய செயல்பாடு 1956 ஆம் ஆண்டு மேலைத்தேய நாடுகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை ஒரு நோயினை அடிப்படையாக கொண்டு அதற்கான சிகிச்சையாக இந்த ஏரோபிக் என்கின்ற உடல் ஆரோக்கிய செயல்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ள .

இது இலகுவான பயிற்சி  முறையாகும் , அலுவலக உத்தியோகத்தர்கள் மிகவும் வேலைப்பளு மத்தியிலும் ,உல அழுத்தம் காரணமாக பல்வேறு வகையான தொற்றாநோய்களுக்கு உள்ளாகின்றார்கள் , அதன் அடிப்படையிலே ஜனாதிபதி உடல் ஆரோக்கியம்  சம்பந்தமாக பல்வேறு வேலைத்திட்டங்களை செயல்படுத்துகின்றார் .  

அந்த அடிப்படையிலே போதை வஸ்து அற்ற ஒரு சமூகமாகவும் , சிறந்த உடல் ஆரோக்கியமான சமூகமாகவும் எமது சமூகத்தை வளர்த்து எடுக்க வேண்டும் என்ற நோக்கில் தேசிய உடல் ஆரோக்கிய வாரமாக பிரகடன படுத்தப்பட்டு அனைத்து அரச அலுவலங்களில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார் .

அந்த அடிப்படையில்  இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலக அலுவலக உத்தியோகத்தர்களுக்கான  உடல் பயிற்சி  ஆரோக்கிய நாளாக நடைமுறைப்படுத்த பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார் .

இந்த ஏரோபிக் “உடல் அப்பியாச செயல்பாட்டு நிகழ்வில் விளையாட்டு திணைக்கள மாவட்ட இணைப்பாளர் எம் .ஆதாம் லெப்பை ,மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி .ஈஸ்வரன் , மண்முனை வடக்கு பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் , டி .பிரசாத் மற்றும்  மாவட்ட செயலக  உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்      .