ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி அடையாள உண்ணாவிரத போராட்டம்


(லியோன் )

அன்னை  பூபதியின் நினைவு நாளில் ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி ஒரு  நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் இன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது
.


மட்டக்களப்பு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்  கட்சியின் மகளிர் அணி தலைவி திருமதி  செல்வி மனோகரன் தலைமையில் அன்னை  பூபதியின் நினைவு நாளில் ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி ஒரு  நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் முன்னெடுக்கப்பட்டுள்ளது .  

இந்த ஒரு  நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்  கட்சியின் பொது செயலாளர் பூ. பிரசாந்தன் உட்பட கட்சி மகளிர் அணி ஆதரவாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்