அன்னை பூபதியின் உதைப்பாந்தாட்ட வெற்றி கிண்ண இறுதிபோட்டி


(லியோன்)


தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவாக நடாத்தப்பட அன்னை பூபதியின் நினைவு வெற்றி கிண்ண உதைப்பாந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிபோட்டி  மட்டக்களப்பில்  நடைபெற்றது 



மட்டக்களப்பு மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளத்தின் அனுசரணையுடன் தேசத்தின் வேர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவாக  மட்டக்களப்பு மாவட்ட கழகங்களுக்கிடையில் பதிவு செய்யப்பட    தர கழகங்களுக்கிடையில் நடத்தப்பட்ட அன்னை பூபதியின் நினைவு வெற்றி கிண்ண உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிபோட்டி  (18)  பிற்பகல் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில்  நடைபெற்றது 


தேசத்தின் வேர்கள் அமைப்பின் இயக்குனர்  கே .பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் விசேட அதிதியாக  முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே .துரைராஜசிங்கம் , கௌரவ அதிதியாக மாநகர முதல்வர் டி .சரவணபவன் ,மற்றும் அதிதிகளாக தேசத்தின் வேர்கள் அமைப்பின் சிரேஷ்ட ஆலோகர் பி . சின்னத்துரை, மாநகர பிரதி முதல்வர் கே .சத்தியசீலன் ,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ப .அரியநேந்திரன் , இராசமாணிக்கம் அறக்கட்டளை இயக்குனர் இரா .சாணக்கியன் ,ஓய்வுநிலை தொழில்நுற்ப அதிகாரி ,எ .செல்வேந்திரன்  .மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தரும் , மாவட்ட கால்பந்தாட்ட சங்க உப தலைவருமான வி .ஈஸ்வரன் , மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்ட சம்மேளன செயலாளர் டி .காந்தன் , ஆகியோர் கலந்துகொண்டனர் .

ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் வீரர்களினால் வரவேற்பு அளிக்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் வீரர்களின்  அறிமுகத்துடன் இறுதி போட்டி ஆரம்பமானது

  தர கழகங்களுக்கிடையில் நடத்தப்பட்ட  உதைப்பந்தாட்ட  சுற்றுப்போட்டியில் இறுதி போட்டிக்கு தெரிவான மட்டக்களப்பு  ஏறாவூர் இளம்தாரகை விளையாட்டு கழக அணியினரும் மட்டக்களப்பு   புன்னச்சோலை கோப்ரா விளையாட்டு கழக அணியினரும் மோதிக்கொண்டன .

இறுதி போட்டி இடம்பெற்ற வேளையில் மட்டக்களப்பு புன்னச்சோலை கோப்ரா விளையாட்டு கழக அணியின் கோல் காப்பாளர் எல்லை கடந்து பந்தினை  கையால் தடுத்தமையால் நடுவரினால் சிகப்பு அட்டை காட்டப்பட்டது .

இதன் போது விளையாட்டு வீரர்களுக்கும்  ரசிகர்களுக்கும் இடையில் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக  போட்டி இடை நிறுத்தப்பட்டு  போட்டி ஏற்பாட்டாளர்களினால் எடுக்கப்பட்ட  முடிவுக்கு அமைய மட்டக்களப்பு  ஏறாவூர் இளம்தாரகை விளையாட்டு கழக அணியிர் முதல் இடத்தினையும் , மட்டக்களப்பு   புன்னச்சோலை கோப்ரா விளையாட்டு கழக அணியினர் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டதாக அறிவிக்கப்பட்டு அன்னை பூபதியின் நினைவு வெற்றி கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டது .

நடத்தப்பட்ட அன்னை பூபதியின் நினைவு வெற்றி கிண்ண உதைப்பந்தாட்ட சுற்றுபோட்டி தொடரில்  சிறந்த கோல் காப்பாளாராக மட்டக்களப்பு புன்னச்சோலை கோப்ரா விளையாட்டு கழக அணியின் வீரர் கவஸ்கார்  தெரிவுசெய்யப்பட்டதுடன் ,சுற்றுபோட்டி தொடரில்   சிறந்த விளையாட்டு வீரராக மட்டக்களப்பு  ஏறாவூர் இளம்தாரகை விளையாட்டு கழக அணியின் வீரர் அனாஸ் ஆகியோர்  தெரிவுசெய்யப்பட்டு வெற்றிகின்னங்கள் வழங்கப்பட்டன