மட்டக்களப்பில் கலை கட்டிய அட்சய திருதியை


 (லியோன்)|

சித்திரை 18 ஆம் திகதி  அட்சய திருதியை தினமாகும் தமிழர்களின் பண்பாடுகளில் அட்சய திருதியை  மிக முக்கிய இடத்தினை  வகிக்கின்றது. இத்தினத்தில்  நகை வாங்கி அணிவதால் என்றும் செல்வம் ஜொலிக்கும்  என்பது தமிழ் மக்களின் நம்பிக்கையாகும்


அட்சய திருதியை  முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள நகை விற்பனை நிலையங்களில் விழாக்கோலம் பூண்டுள்ளதை  காணமுடிந்தது

மட்டக்களப்பு நகரில் உள்ள நகை விற்பனை நிலையங்களில் காலை முதல் மாலை வரை பெருமளவான மக்கள் நகை கொள்வனவு  செய்தார்கள் .

அட்சய திருதியை  முன்னிட்டு .நகை கொள்வனவு செய்தவர்களுக்கு விசேட பரிசுகளும் வழங்கப்பட்டன.

இதேபோன்று மட்டக்களப்பு நகரில் உள்ள அனைத்து நகை விற்பனை நிலையங்களிலும் அட்சய திருதியை நிகழ்வுகள் நடைபெற்றன.