அமிர்தகழி கிராம இளைஞர் கழகத்தின் சித்திரை புத்தாண்டு நிகழ்வு


(லியோன்)

தமிழ் சிங்கள புத்தாண்டை
சிறப்பிக்கும் வகையில் பாரம்பரிய கலாசாரா சித்திரை புத்தாண்டு நிகழ்வு நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்டு  வருகின்றது


மட்டக்களப்பு மாவட்டத்திலும் தமிழ் பாரம்பரிய சித்திரை புத்தாண்டு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன

இதற்கு அமைய மட்டக்களப்பு  மண்முனை வடக்கு பிரதேச செயக பிரிவின்  அமிர்தகழி கிராம இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் அமிர்தகழி கிராம சிரேஷ்ட பிரஜைகளின் ஒத்துழைப்புடன் புதுவருட கலை கலாசார விளையாட்டு போட்டி நிகழ்வுகள் நேற்று பிற்பகல் அமிர்தகழி ஸ்ரீ கண்ணகியம்மன் ஆலய முன்றலில் நடைபெற்றது

தமிழ் பாரம்பரிய கலாசாரத்தை நினைவு படுத்தும் வகையில் கலாசார விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது . இதன்போது போட்டிகளில் பங்குபற்றி வெற்றிபெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது

இந்த கலாசார விளையாட்டு நிகழ்வில் அமிர்தகழி கிராம இளைஞர் கழக இளைஞர் ,யுவதிகள் பாடசாலை மாணவர்கள் கிராம மக்கள் என பலர் கலந்துகொண்டனர் .