சமுர்த்தி சமுதாய அடிப்படை நிர்வாக உறுப்பினர்களை புதுப்பித்தலுக்கான பொதுக்கூட்டம்


(லியோன்)

சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்கள் மற்றும் சமுர்த்தி பிரதேச அமைப்புக்களுக்கான நிர்வாக உறுப்பினர்களை புதுப்பித்தலுக்கான  வருடாந்த  பொது கூட்டம் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது
 

2017ஆம் ஆண்டின்   01 ஆம் இலக்க சமுர்த்த் சட்டத்தின் 09  மற்றம் 15 ஆம் பிரிவுகளுக்கு ஏற்றாதாக தாபிக்கப்பட்ட சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு மற்றும் பிரதேச அமைப்புக்களை புதுபித்தல் மற்றும்  புதிய  நிர்வாக உறுப்பினர்களை தெரிவு செய்யும் பொதுக்கூட்டம் மாவட்டத்தில் சகல பிரதேச செயலகங்களிலும் நடைபெறுகின்றன .

இதன் கீழ் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட சமுர்த்தி  வலயத்திற்கான  சமுர்த்தி சமுதாய அடிப்படை   அமைப்புக்களின் நிர்வாக  உறுப்பினர்கள் தெரிவு மற்றும் அமைப்பின்  பதிவை புதுப்பித்தலுக்கான பொதுக்கூட்டம் இன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் கே ,குணநாதன் தலைமையில்  நடைபெற்றது .

இதன்போது  2018 ஆம் ஆண்டுக்கான மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவின்  சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்கான  21  நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் 2018 ஆம் ஆண்டில் சமுர்த்தி வங்கிகள் ஊடாக கிராம மட்டத்த்தில்  செயல்படுத்தவுள்ள செயல் திட்டங்களும் முன்வைக்கப்பட்டன

இந்த வருடாந்த பொதுகூட்ட நிகழ்வில் சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி நிர்மளா கிரிதரன் ,சமுர்த்தி தலைமையாக முகாமையாளர் திருமதி .செல்வி வாமதேவம் மற்றும் சமுர்த்தி சமுதாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் நிர்வாக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்