மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற, பிறைன் வீதியில் (மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் முன்னால்) அமைந்துள்ள பவளகாந்தன் மண்டபத்தின் திறப்பு விழாவானது மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற தலைவர் சா.அருள்மொழி தலைமையில் நடைபெற்றது. சமய ஆச்சாரங்களுடன் மன்றத்தின் மூத்த உறுப்பினரும் மன்ற உப தலைவருமான கலாநிதி அ.செல்வேந்திரன் அவர்களினால் நாடா வெட்டி பவளகாந்தன் மண்டபமானது சம்பிரதாய முறைப்படி திறந்துவைக்கப்பட்டது.
புனரமைப்பு செய்யப்பட்ட மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற பவளகாந்தன் மண்டபமானது தற்போது புதுப் பொழிவுடன் காணப்படுகிறது.
இனிவரும் காலங்களில் சமய,கலாசார ,ஆன்மிக நிகழ்வுகளும், திருமணம் மற்றும் ஏனைய மங்களகரமான நிகழ்வுகளும் ,கருத்தரங்குகள் ,பயிற்சிகள் ,பொதுக்கூட்டங்கள் போன்ற நிகழ்வுகளை நடத்த இம்மண்டபத்தினை மிகமிக குறைந்த கட்டணத்தில் பொதுமக்கள் பயன்படுத்த முடியுமென தலைவர் தனது உரையில் குறிப்பிட்டார்.