கொழும்பு புறக்கோட்டையில் பட்டதாரி சங்கத்தின் எதிர்ப்புப் பேரணி!



கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்தின் முன்னால் இன்று (24.04.2018) ஒருங்கிணைந்த பட்டதாரி சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்ப்புப் பேரணி ஒன்று இடம்பெற்றது.

01.35 வயதிற்கு மேற்பட்ட பட்டதாரிகளை உள்வாங்குவதை உறுதிப்படுத்தவேண்டும்.

02.HNDA பட்டதாரிகள் சில மாவட்டங்களில் புறக்கணிக்கப்பகடுவதை உடனடியாக நிறுத்தி அனைத்து HNDA பட்டதாரிகளும் நியமனத்துள் உள்வாங்கப்படவேண்டும்.

03.இன்றுவரை பட்டம் பெற்ற பட்டதாரிகள் அனைவரையும் உள்வாங்க வேண்டும்.

போன்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் எதிர்ப்பு பேரணி ஒன்றை நடாத்தியதுடன் தொடர்ந்து பிரதமர் செயலக பொதுசன தொடர்பு அதிகாரி, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சு போன்றவற்றுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் பி.ப 3.00 மணியின் பின்னர் தீர்வுகள் எட்டப்பட்டது.

இதன்படி 35 வயததிற்கு மேற்பட்ட பட்டதாரிகள் எந்த தடையுமின்றி நியமனத்துள் உள்ளீர்க்கப்படுவார்கள், HNDA பட்டதாரிகள் அனைவரும் நியமனத்துள் உள்வாங்கப்படுவர். அத்தோடு நியமனக்கடிதம் கிடைக்காத பட்டதாரிகள் நேர்முக பரீட்சைக்கு அழைப்படுவார்கள் போன்ற உறுதி மொழிகளை தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சின் அதிகாரிகள் வழங்கினார்கள்.





Add caption