மட்டக்களப்பு பிரதம தபால் நிலையத்தின் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும்.

 (சசி துறையூர்)      
மட்டக்களப்பு மாவட்ட பிரதம  தபால் காரியாலயத்தின் குறைபாடுகளை கண்டறிய நேரில் விஜயம் செய்து ஆராய்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன்  தபால் நிலையத்தின் குறைபாடுகளை உரிய அமைச்சின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டார்.


மட்டக்களப்பு மாவட்ட பிரதம தபாலதிபரின் வேண்டுகோளுக்கிணங்க பிரதம தபால் நிலையத்திற்கு நேரில் விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தபால் நிலையத்தின் நிலமைகளை நேரில் கண்டறிந்ததோடு ஊழியர்களிடமும் கலந்துரையாடினார்.

மிக நீண்ட கால பயன்பாட்டை கொண்ட தபாலக கட்டிடமானது இதுவரை காலமும் புனரமைப்பு செய்யப்படவில்லை,
என்பது காலப்பகுதியில் கட்டப்பட்ட மலசல கூடம்,  அலுவலர்கள் தங்களது நாளாந்த கடமைகளை முன்னெடுப்பதற்கு போதிய இடவசதியின்மை, தூரப்பிரதேசங்களிலிருந்து வந்து தங்கி நின்று வேலை செய்யும் ஊழியர்களுக்கு விடுதி வசதியின்மை, போன்ற குறைபாடுகள் பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு சுட்டிக்காட்டப்பட்டது.

அத்தோடு தபால் நிலையத்திற்கு சொந்தமான கட்டிடமொன்று அருகிலுள்ள பாடசாலைக்கு வழங்கப்பட்டு அதற்கு பதிலாக காணி  ஒன்றும்பெறப்பட்டிருக்கிறது, அந்த காணியில் ஊழியர்களுக்கான விடுதி அமைப்பதற்கும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.