களுவாஞ்சிகுடியில் இரு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு

மட்டக்களப்பு,குருமண்வெளியினை சேர்ந்த கலாபூசணம்,கலைச்செம்மல் மு.தம்பிப்பிள்ளையின் இரண்டு நூல்களின் வெளியீட்டுவிழா இன்று சனிக்கிழமை காலை களுவாஞ்சிகுடியில் நடைபெற்றது.

களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் தென்றல் சஞ்சிகையின் ஏற்பாட்டில் இந்த நூல்கள் வெளியிட்டு வைக்கப்பட்டன.

வாழப்பிறந்தவள் என்னும் சிறுகதையும் புதுமைப்பெண் சுதந்திரப்பறவைகள் என்னும் நாவலும் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டன.

தென்றல் சஞ்சிகையின் ஆசிரியர் க.கிருபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெட்னம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக பட்டிருப்பு வலய கல்விப்பணிப்பாளர் ஆர்.சுகிர்தகுமார்,சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.சிவநாதன்,பட்டிருப்பு வலய பிரதிக்கல்வி;பணிப்பாளர் செல்வி கி.ஜெயந்திமாலா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் ஆசியுரையினை குருமண்வெளி மஹாவிஸ்ணு நாகதம்பிரான் ஆலய பிரதமகுரு ஆச்சாரிய திலகம் சிவஸ்ரீ வ.யோகராசா குருக்கள் நிகழ்த்தினார்.

நூல்வெளியீட்டில் முதல் நூலை தமிழச்சங்க பொருளாளரும் தொழிலதிபருமான புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி பெற்றுக்கொண்டதுடன் நூல் வெளியீடு சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது நூலாசிரியர் கலாபூசணம்,கலைச்செம்மல் மு.தம்பிப்பிள்ளை அதிதிகளினாலும் எழுத்தாளர்களினாலும் கௌரவிக்கப்பட்டார்.