News Update :
Home » » லொயோலா கற்கை நிலையம் மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது .

லொயோலா கற்கை நிலையம் மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது .

Penulis : Anthony Leon raj on Saturday, March 10, 2018 | 6:59 AM


 .(லியோன்)

மட்டக்களப்பு மாவட்ட லொயோலா ஆங்கிலம் மற்றும் கணணி கற்கை நெறிக்கான நிலைய இயக்குனர் அருட்தந்தை எஸ் .றொசான் தலைமையில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் இன்று திறந்து வைக்கப்பட்டது .


இலங்கையில் பாடசாலை மாணவர்களின் ஆங்கில அறிவு திறன் மற்றும் கணணி அறிவினை மேம்படுத்தும் நோக்குடன் நாடளாவிய ரீதியில் லொயோலா ஆங்கிலம் மற்றும் கணணி கற்கை நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டு  பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன .

இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களின் ஆங்கிலம் ,கணணி அறிவினை மேம்படுத்தும் முகமாக  லொயோலா ஆங்கிலம் மற்றும் கணணி கற்கை  நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது .

இந்த கற்கை நிலையம் தொடர்பாக  மாவட்ட  இயக்குனர் அருட்தந்தை எஸ் .றொசான் தெரிவிக்கையில்  இந்த கற்கை நிலையத்தில் பயிர்சிகளானது 4   மாதங்கள் மற்றும் 10  மாதங்கள் வரை பயிற்சிகள் வழங்கப்பட்டு அரச அனுமதி பெற்ற டிப்ளோமா சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது ..

இந்த பயிற்சி நெறியில் தரம் ஒன்றில் இருந்து தரம் 12 வரை உள்ள மாணவர்களை இணைத்துகொல்வதுடன் தொழில் செய்பவர்களும்  இந்த கற்கை நெறி பயிற்சி கலந்துகொள்ள முடியும் என தெரிவித்தார்

மட்டக்களப்பு மாவட்ட  லொயோலா ஆங்கிலம் மற்றும் கணணி கற்கை நெறிக்கான நிலையத்தினை இலங்கை நாட்டுக்கான யேசு சபை இயக்குனரும்  லொயோலா கற்கை நெறிக்கான நிலைய இயக்குனருமான அருட்தந்தை மில்ரோய் பெர்னாண்டோ ,அதிதியாக கலந்துகொண்டு நிலையத்தினை ஆரம்பித்து வைத்தார் .

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண யேசு சபை இயக்குனர் அருட்தந்தை டெக்டர் கிறே , யேசு சபை துறவி அருட்தந்தை போல் சற்குண நாயகம் ,புனித மிக்கேல் கல்லூரி அதிபர் பயஸ் ஆனந்தராஜா மற்றும் அருட்தந்தையர்கள் ,அருட்சகோதரிகள் , மாணவர்கள் கலந்துகொண்டனர்

இந்த பயிற்சி நெறிக்காக தரம் ஒன்று மாணவர்கள் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் இணைத்துகொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது 












Share this article :

Post a Comment

 
Design Template by panjz-online | Support by creating website | Powered by Blogger