தைபூசம் புதிர் எடுக்கும் சிறப்பு பூஜை நிகழ்வு (Video & photos)

(லியோன்)

இந்துக்களின் மிக முக்கியத்துவமான தினங்களில் ஒன்றான தைப்பூசத்தினை முன்னிட்டு ஆலயங்களில் விசேட பூஜைகளும் தமிழர்களின் பண்பாடுகளில் ஒன்றான புதிர் எடுக்கும் நிகழ்வுகளும் ஆலயங்களில் சிறப்பான முறையில் நடைபெற்றன.


(31) புதன்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் இந்த தைப்பூச நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.

இயற்கை வனப்பும் மிகப்பழமைவாய்ந்த ஆலயங்களுல் ஒன்றாகவும் கருதப்படும் மட்டக்களப்பு கொத்துக்குளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தைப்பூசத்தினை முன்னி;ட்டு சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன.

ஆலயத்தில் விசேட யாகம் மற்றும் அபிசேகம் நடைபெற்று பிரதான கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு  அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது .இதனை தொடர்ந்து ஆலயத்தின் வயற்காணியில் நெல் அறுவடை செய்யப்பட்டு புதிர் எடுக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து பௌர்ணமி தினப் பூசையுடன்  ஸ்ரீ சக்கர ஸ்தாபன அபிஷேகம் , வசந்த மண்டப பூஜை நடைபெற்று  அம்பாள் உள்வீதி உலாவருதல் நிகழ்வும் நடைபெற்றது. 

பண்டையாக காலம் தொடர்க்கம் தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்களுடன் நடைபெறும் இந்த தைபூசம் புதிர் எடுக்கும் நிகழ்வில் ஆலய நிர்வாக சபையினர் பக்தர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.