திருநீற்றுப்புதன் விசேட திருப்பலி


(லியோன்)

கிறிஸ்தவர்களின்
 திருநீற்றுப்புதன் இன்றாகும். இன்று முதல் கிறிஸ்தவர்களின் புண்ணிய தவக்காலம்  ஆரம்பமாகிறது. இத் தவக்காலம் எதிர்வரும்  மார்ச் மாதம் 30  ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை அனுஸ்டிக்கப்படும்.


மார்ச் மாதம் 30  ஆம் திகதி பெரிய வெள்ளி, அன்று இயேசு கிறிஸ்து பாடுபட்டு மரித்து அடக்கம் செய்ய பட்ட நாளாகும். இக் தவக்காலம் இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பு ஆகிய மூன்றையும் நினைவு கூர்கின்றது.

இந்த காலத்தில் கிறிஸ்தவர்கள் தம்மை ஒறுத்தல்கள், தியாகம், தானம், தர்மம் மற்றும் ஜெபம் வழிபாடுகளென ஆன்மீக வாழ்வில் தம்மை ஈடுபடுத்திக்கொள்வார்கள்.

இதன் ஆரம்ப நாளான திருநீற்றுப்புதன் இன்று உலக அனைத்து நாடுகளிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட திருப்பலி நடைபெற்று இன்றைய தினத்தை கிறிஸ்தவர்கள் நினைவு கூர்தார்கள்.

இதனை நினைவு கூறுமுகமாக மட்டக்களப்பு  புளியடிகுடா புனித செபஸ்தியார் ஆலயத்தில்  திருநீற்றுப்புதன் சடங்கு திருப்பலி  அருட் தந்தை  இயேசு சபை துறவி அருட்பணி லோரன்ஸ் அடிகளினால் ஒப்புகொடுக்கப்பட்டது .


இந்த  விசேட திருப்பலியில்  பெருமளவிலான பங்கு கிறிஸ்தவ பெருமக்கள்  கலந்துகொண்டனர்