தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ நினைப்பவர்களுடன் ஆட்சிய அமைக்க தயார் –தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி

தமிழர்களின் நில,நிர்வாக எல்லைக்களை பாதுகாத்துக்கொண்டு தமிழர்கள் தலை நிமிர்ந்துவாழும் சூழலை உருவாக்கும் எண்ணம்கொண்ட தமிழ் அரசியல் கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கு தயாராகயிருப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அலுவலகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
பல்வேறு கையூட்டல்களுக்கு மத்தியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் கொள்ளையினை ஏற்றுக்கொண்டு தூர நோக்கிய சிந்தனையுடன் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
இம்முறை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிமீது பாரிய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன.கட்சியின் தலைவரை சிறையில் அடைத்து எமது கட்சியின் செயற்பாடுகளை முற்றுமுழுவதுமாக முடக்கிவிடலாம் என்று நம்பியிந்த தலைமைத்துவங்களுக்கு கிழக்கின் மாற்று தலைமைத்துவம் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிதான் என்பதை மக்கள் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர்.
தமிழர்களின் நில,நிர்வாக,நிதி,பாதுகாப்பினை ஏற்படுத்திக்கொண்டு தமிழர்கள் தலை நிமிர்ந்துவாழக்கூடிய அரசியல் அதிகார சூழலை உருவாக்கும் நோக்கத்தினை நாங்கள் இந்த தேர்தலின்போது வெளிப்படுத்தியிருந்தோம்.
அந்த அடிப்படையில் வாகரை பிரதேசம்,கோறளைப்பற்று பிரதேசம்,செங்கலடி பிரதேச உள்ளுராட்சிசபைகளில் எமது கட்சி அதிகளவான ஆசனங்களை பெற்றுள்ளது.குறித்த பகுதியில் தமிழர்கள் ஆட்சியமைப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம் என்று பகிரங்க அழைப்பு விடுத்துள்ளோம்.
தமிழர்களின் எல்லைகளும் நிர்வாகங்களும் மாற்றப்பட்டு பல்வேறு பிரச்சினைகளை தமிழ் மக்கள் எதிர்நோக்கிக்கொண்டிருக்கின்ற கோறளைப்பற்றில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தமிழ் தேசிய கூட்டமைக்கு அழைப்பு விடுத்தோம் ஆனால் இதுவரையில் எந்த பதிலும் வழங்கப்படவில்லை.
எமது கதவுகள் எப்போதும் திறந்துள்ளது.நாளாந்தம் எல்லைப்பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள பிரதேசங்களிலும் தமிழர்கள் ஆட்சியமைப்பதற்காக ஆதரவு வழங்க தயாராகவுள்ளோம்.
கடந்த காலத்தினைவிட இந்த தேர்தலில் எமது கட்சி அதிகளவான வாக்குளைப்பெற்றுள்ளது.ஆனாலும் எந்த கட்சியும் பெரும்பான்மையுடன் ஆட்சியமக்கமுடியாத நிலையே உள்ளது.தமிழ் மக்கள் ஆட்சியமைப்பதற்காக நாங்கள் எந்த சந்தர்ப்பத்திலும் யாருடனும் பேச தயாராகயிருக்கின்றோம்.என்றாது.