சிந்துவெளி நாகரிகம் தொடர்பில முதன்முதலாக தமிழில் ஆய்வுசெய்து வெளியிட்ட மட்டக்களப்பு தமிழன்

தமிழர்களின் தோற்றுவாயின் ஆரம்ப நாகரிக நகரமாக கருதப்படும் சிந்துவெளி நாகரிகம் தொடர்பில் முதல்முறையாக ஆய்வுசெய்யப்பட்டு நூலாக இலங்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு குறுமண்வெளியை சேர்ந்த ஓய்வுபெற்ற பிரதி அதிபர் க.பரராஜசிங்கம் என்பவர் கடந்த மூன்று வருடத்திற்கு மேலாக ஆய்வுசெய்து “சிந்துவெளி நாகரிகமும் தமிழரும்”என்னும் நூலை வெளியிட்டு வைத்துள்ளார்.

மட்டக்களப்பு தமிழ் சங்கம் இந்த நூலை வெளியிட்டு வைத்துள்ளது.இந்த நூலின் வெளியீட்டு நிகழ்வு மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சட்டத்தரணி மு.கணேசராசா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முதன்மை அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார்,கிழக்கு பல்கலைக்கழக வேந்தர் வைத்தியகலாநிதி வே.விவேகானந்தராசா ஆகியோர் கலந்துகொண்டனர்.

சிறப்பு அதிதிகளாக பேராசிரியர் மா.செல்வராசா,பேராசிரியர் அம்மன்கிளி முருகதாஸ்,பேராசிரியர் செ.யோகராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது முதல்பிரதியை தேசபந்து மு.செல்வராஜாவும் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தியும் பெற்றுக்கொண்டனர்.

இந்த நூல் வெளியீட்டு நிழக்வில் நூல் வெளியீட்டு உரையினை கவிக்கோ வெல்லவூர் கோபல் நிகழ்த்தியதுடன் நூல் நயவுரையினை கி.சிவகணேசன் நிகழ்த்தினார்.

இந்த நிகழ்வில் எழுத்தாளர்கள்,ஆய்வாளர்கள்,பொதுமக்கள் என ஏராளமானோர்க கலந்துகொண்டனர்.

தமிழ் எழுத்து துறையில் முதல்முறையாக சிந்துவெளி நாகரிகம் தொடர்பில் வெளியிட்டு வைக்கப்பட்டுளளதுடன் இதுவரை காலமும் தமிழ் எழுத்து துறையில் வெளிவராத அரிய பல தகவல்கள் குறித்த நூலில் வெளியிடப்பட்டுள்ளதாக இங்கு  உரையாற்றியவர்கள் தெரிவித்தனர்.