மைக்கல் கல்லூரி பழைய மாணவர்களின் வருடாந்த ஒன்று கூடல்

(லியோன்)

மட்டக்களப்பு மைக்கல் கல்லூரி அலும்ணி சங்கத்தின் பழைய மாணவர்களின்  வருடாந்த ஒன்று கூடலும் வருட இறுதி நிகழ்வும் (31-2017) மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது


இலங்கையின் பழைமை வாய்ந்த பாடசாலையான  மட்டக்களப்பு  மைக்கேல் கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் வருடாந்த ஒன்றுகூடலும்  வருட இறுதி நிகழ்வும் மைக்கல் கல்லூரி அலும்ணி சங்கத்தின் பழைய  மாணவ தலைவர் அருட்பணி நவரெட்ணம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.


மட்டக்களப்பு மைக்கல்  கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தின் தலைவர்  அருட்பணி நவரெட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யடவர  அதிதியாக கலந்துகொண்டார்.


மற்றும்  அதிதிகளாக  கல்லூரி  அதிபர் பயஸ் ஆனந்தராஜா  உட்பட  அருட்தந்தையர்கள் கல்லூரியின் சிரேஸ்ட பழைய மாணவர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதன்போது வருட இறுதி நிகழ்வினை சிறப்பிக்கும் வகையில் அருட்தந்தையார்களினால்  வருட இறுதி கேக்கினை  வெட்டி கல்லூரி சிறார்களுக்கு கொடுக்கப்பட்டதுடன் ,பரிசில்களும் வழங்கப்பட்டது

நடைபெற்ற நிகழ்வில் கல்லூரி பழைய மாணவர்களின் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினர்கள் மற்றும் தேசிய ரீதியிலும் ,சர்வதேச  ரீதியிலும் நடத்தப்பட்ட  கபடி மற்றும் கூடைப்பந்து போட்டிகளில் பங்குபற்றி சாதனை படைத்த கல்லூரிக்கு பெருமை சேர்த்த பழைய மாணவர்களை கௌரவித்து விருதுகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது