பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் உணவு விற்பனை மையம்



(லியோன்)

பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் உணவு உற்பத்தி மற்றும் விற்பனை மையம் மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டது   


கிழக்கு மாகான பெண்கள் அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையில் பெண்கள் சுயதொழில் அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தின் ஏற்பாட்டில் வறுமை கோட்டின் கீழ் பெண்கள் தலைமை தாங்கும்  குடும்ப பெண்களில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் சுயதொழில் ஊக்குவிப்பு  திட்டத்தின் உணவு உற்பத்தி மற்றும் விற்பனை  மையம் மட்டக்களப்பு செப்பல் வீதி பொதுச்சேவை கழக வளாகத்தில்  திறந்து வைக்கப்பட்டது .

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு இந்த விற்பனை மையத்தை திறந்து வைத்தார் . இதனுடன் இணைந்ததாக தேசிய நல்லிணக்க அமைச்சின் நிதி உதவியின் வழங்கப்பட்ட உணவு உற்பத்தி செய்வதற்கான உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது .

இந்நிகழ்வில் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் ஆர் .நெடுஞ்செழியன் ,மாவட்ட செயலக பிரதம கணக்காளர் எஸ் .நேசராஜா ,மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆர், ஜதிஸ் குமார் , மட்டக்களப்பு கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் கே .கனகசுந்தரம் , அம்கோர் நிறுவன நிகழ்ச்சி திட்ட முகாமையாளர்  எஸ் சிவயோகராஜன் மற்றும் . பெண்கள் சுயதொழில் அபிவிருத்தி கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் .