கரையோர வளங்களை பாதுகாத்தல் தொடர்பான செயலமர்வு

(லியோன்)

“எம்மால் எமது சந்ததிக்காக  கரையோர வளங்களைப் பாதுகாப்போம்“ எனும் தொனிப்பொருளில் கரையோர வளங்களை பாதுகாத்தல் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெற்றது  
 

மட்டக்களப்பு முகத்துவாரம் பாலமீன்மடு லையிட் ஹவுஸ் விளையாட்டு கழக அனுசரணையுடன் மட்டக்களப்பு கரையோர பேணல் திணைக்களம் இணைந்து ஏற்பாடு செய்யப்பட கரையோர வளங்களை பாதுகாத்தல் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு மட்டக்களப்பு முகத்துவாரம் பாலமீன்மடு லையிட் ஹவுஸ் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது .

கடந்த  12 ஆம் மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட மட்டக்களப்பு முகத்துவாரம் , பாலமீன்மடு கடற்கரையை அண்மித்த பகுதியில் கொக்கு தீவு என அழைக்கப்பட்டும் பறவைகள் சரணாலயம் இனம் தெரியாத நபர்களினால் தீயிட்டு நாசமாக்கப்பட்டது

இவ்வாறு நாசமாக்கப்பட்ட பகுதியை பார்வையிட்ட அதிகாரிகள்  அழிக்கப்படும் இயற்கை வளங்களை பாதுகாக்கும் நோக்குடன் பொதுமக்களுக்கு தெளிவுப்படுத்தும் நிகழ்வாக இந்த விழிப்புணர்வு செயலமர்வு நடைபெற்றது

செயலமர்வில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் , என் .மணிவண்ணன் மண்முனைவடக்கு பிரதேச செயலாளர் , கே .குணநாதன் ,மாவட்ட கரையோர பேணல் திணைக்கள திட்ட முகாயாளர் கே .கோகுலதீபன் , கரையோர பேணல் திணைக்கள  மாவட்ட செயலக உத்தியோகத்தர் திருமதி மலர்விழி மற்றும் நாவலடி ,திராய்மடு ,மட்டிக்களி ,பாலமீன்மடு ஆகிய கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் , மீனவ அமைப்புக்களின் உறுப்பினர்கள் ,பொலிஸ் உத்தியோகத்தர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள்  என பலர் கலந்துகொண்டனர்


இந்த செயலமர்வை தொடர்ந்து குறித்த பறவைகள் சரணாலயத்தை பார்வையிட்டதுடன் தீவுப்பகுதியில்  அமைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை திறந்து வைக்கப்பட்டடு தீவு பகுதியில் மரக்கன்றுகள் நாட்டப்பட்டமை  குறிப்பிடத்தக்கது