சிறுவர் தொழிலாளர்களை இல்லாது செய்தல் தொடர்பான பயிற்சி பட்டறை

(லியோன்)

சிறுவர் தொழிலாளர்களை இல்லாது  செய்தல் தொடர்பான  வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன
 .

1956 ஆம் ஆண்டு 17ஆம் இலக்க பெண்கள் ,இளைஞர் மற்றும் பிள்ளைகளை தொழில் ஈடுப்படுத்தல் சட்டம் 2006 ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க திருத்தத்தின்படி 20  (அ) பந்தியின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஒழுங்கு விதியின்படி 18வயதுக்கு குறைந்த ஆண் ,பெண் எவரும் ஆபத்தான வேளைகளிலோ , வேலையிலோ ஈடுபடுத்தப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது

தொழில் திணைக்களத்தால் தொடர்ச்சியாக செய்யப்பட விஞ்ஞான ரீதியான மற்றும் விசேடமான ஆய்வுகள் மூலம் 18 வயதுக்கு குறைந்தவர்களில் உடல் மற்றும் உளநலன்களுக்கும் பாதுகாப்பிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் 51  தொழில்கள் ஆபத்தான தொழில்கள் என கண்டறியப் பட்டுள்ளன

இதன் கீழ்  மிருகங்களை இறைச்சிக்காக வெட்டுதல் ,கிருமி நாசினி உற்பத்தி , வெடிபொருள் உற்பத்தி , மதுபானம் விற்றல் , இறப்பர் ,தோல் பதனிடல் , இயந்திர உபகரணங்கள் இயக்குதல் , சுரங்கம் ,கல்லுடைத்தல் ,இரும்பு ,கண்ணாடி எரிபொருள் விற்பனை ,கட்டட நிர்மாணம் , வாகனபோக்குவரத்து , மறமேருதலும்,வெட்டுதல் ,ஆயுத போராட்டம் , குப்பை கூளங்கள் ,கழிவுகள் ஏற்றியிறக்கல், புடவை தைத்தல் போன்ற ஆபத்தான தொழில்களில் ஈடுப்படுத்துவதை தவிர்த்தல் .

தொடர்பாக சிறுவர் தொழிலாளர்களை இல்லாது செய்தல் தொடர்பான தேசிய வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன .

இதற்கு அமைய மட்டக்களப்பு  மாவட்டத்தில்  சிறந்த சிறுவர்களையும் சிறந்த எதிர்கால சிறுவர்களை உருவாக்குதல் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுன .

இந்த வேலைத்திட்டம் தொடர்பாக நடைமுறைப்படுத்தம் பயிற்சி பட்டறை மாவட்ட செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் வி  குகதாசன் ஒழுங்கமைப்பில் ,மட்டக்களப்பு மாவட்ட உதவி மாவட்ட செயலாளரும் சிறுவர் தொழிலார்கள் அற்ற மாவட்ட இணைப்பாளருமான எ . நவேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயகலத்தில்  நடைபெற்றது  

இந்த பயிற்சி பட்டறையில் மட்டக்களப்பு மாவட்ட தொழில் திணைக்கள உதவி தொழில் ஆணையாளர் எ .கோகுல ரஞ்சன் , மட்டக்களப்பு பிராந்திய  சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே .அச்சுதன் , கிழக்குமாகாண  ஐ எல் ஒ . நிறுவன  சிறுவர் தொழில் ஆலோசகர் எ .அமீர்  மற்றும் அரச திணைக்கள அதிகாரிகள் , பொதுசுகாதார பரிசோதகர்கள் ,சமுதாயசார் சீர்திருத்த அலுவலக உத்தியோகத்தர்கள் , பொலிஸ் திணைக்கள அதிகாரிகள் , சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்