மண்முனை வடக்கு பிரதேச செயலக உழவர் பொங்கல் விழா

(லியோன்)

உழவர் திருநாளை முன்னிட்டு மாபெரும் பொங்கல் விழா
 மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில்  நடைபெற்றது .


மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகம் மற்றும் கலாசார  சமூக அமைப்புக்களின் ஏற்பாட்டில்   உழவர் திருநாளை முன்னிட்டு    பாரம்பரிய  கலாச்சார பொங்கல் விழா  மண்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளர்   கே .குணநாதன்  தலைமையில்  நடைபெற்றது.

இதன் ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு கோட்டமுனை வீரகத்தி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமான பண்பாட்டு கலாசார ஊர்வலம் மட்டக்களப்பு  கல்முனை பிரதான வீதி ஊடாக பிரதேச  செயலகத்தை வந்தடைந்தது

இதனை தொடர்ந்து கலாசார பாரம்பரிய பண்பாட்டு  நிகழ்வுகளுடன்  மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சமூக  அமைப்புக்களினால் பொங்கல் நிகழ்வு சிறப்பிக்கப்பட்டதுடன்  பிரதேச செயலக வளாக ஆலயத்தில் பொங்கல் விழா சிறப்பு பூசைகள்  நடைபெற்றது


இந்நிகழ்வில்  மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மண்முனை வடக்கு  கிராமிய அபிவிருத்தி சங்கம்  மாதர் அபிவிருத்தி சங்கம் ,சிரேஷ்ட பிரஜைகள் சங்கம் சமுர்த்தி சங்கம்  கிராம மாதர் சங்கம் சிறுவர் கழகம்கிராம மட்ட சிவில் குழு  உறுப்பினர்கள் கலந்துகொண்டு பொங்கல் விழாவை சிறப்பித்தனர் .