போரதீவுப்பற்று திண்மக்கழிவகற்றலை அகற்ற துரித நடவடிக்கை முன்னெடுப்பு.

(பழுகாமம் நிருபர்)
 மட்டக்களப்பு திருப்பழுகாமத்தில் திண்மக்கழிவு கொட்டலை எதிர்த்து பழுகாமம் கிராம மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை 03.01.2018ம் திகதி நடாத்தியிருந்தனர். கழிவுகளை கொண்டு வந்த ட்ரக்ரர் வண்டிகளை இடைநிறுத்தி இவ் ஆர்ப்பாட்டத்தை நடாத்தியிருந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போரதீவுப்பற்று பிரதேச சபை செயலாளர் அ.ஆதித்தனுடம் ஆர்ப்பாட்டகாரர்கள் நீண்ட நேர வாக்குவாதத்தின் பின்னர் திண்மக்கழிவு சேகரித்தல் நிரந்தர இடம் கிடைக்கும் வரைக்கும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக பிரதேசசபை செயலாளர் துரிதமாக செயற்பட்டு வருகின்றார். மட்டக்களப்பு பிராந்திய உள்ளூராட்சி பிரதி ஆணையாளர் கா.சித்திரவேல் போரதீவுப்பற்று பிரதேச சபைக்கு வருகைதந்து இவ்விடயம் தொடர்பாக ஆராய்ந்துள்ளனர். மேலும் போரதீவுப்பற்று பிரதேச செயலாளருடன் கலந்துரையாடி புதிய இடம் ஒன்றை பெறுவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். மிக விரைவாக இப்பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற வேண்டும் என்று மிகவும் துரிதமாக பிரதேச சபை செயலாளர் செயற்பட்டு வருகின்றார். மக்களுக்காகத்தான் சேவை புரிய வந்துள்ளோம் என்பதையும் பழுகாம மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் வலியுறுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.