கரிட்டாஸ் எகெட் இயக்குனராக அருட்தந்தை எலக்ஸ் ரொபட் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்

(லியோன்)

மட்டக்களப்பு கரிட்டாஸ் எகெட்  நிறுவக புதிய இயக்குனராக அருட்தந்தை  எலக்ஸ்  ரொபட் அடிகளார் கடமைகளை  பொறுப்பேற்கும் நிகழ்வு  இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது


மட்டக்களப்பு மாவட்ட கரிட்டாஸ் எகெட்   நிறுவக அமைப்பினால் ஒருகிணைந்த சமூக அபிவிருத்தி திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை கோட்டின்கீழ் வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் ஊடாக பல வாழ்வாதார உதவி திட்டங்களை முன்னெடுத்து  வருகின்றன .  

இந்தநிலையில் கடந்த மூன்று வருடங்களாக  மட்டக்களப்பு மாவட்ட  கரிட்டாஸ் எகெட்  நிறுவகத்தில்  இயக்குனராக கடமையாற்றிய அருட்தந்தை  ஜெரோம் டிலிமா  2018 ஆம் ஆண்டு முதல் மறை மாவட்டத்தில் பங்கு இடமாற்றம் பெற்று செல்லும் வேளையில் புதிய இயக்குனராக அருட்தந்தை  எலக்ஸ்  ரொபட் அடிகளார் தமது கடமைகளை அருட்தந்தை  ஜெரோம் டிலிமாவிடம் இருந்து பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது

மட்டக்களப்பு கரிட்டாஸ் எகெட்   நிறுவக உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக இறை வழிபாடு இடம்பெற்றது .இதனை தொடர்ந்து புதிய இயக்குனரை வரவேற்கும் நிகழ்வும் தொடர்ந்து கடமைகளை பொறுபேற்கும் நிகழ்வும் இடம்பெற்றது .
இந்நிகழ்வில்  மட்டக்களப்பு கரிட்டாஸ் எகெட்   நிறுவக உத்தியோகத்தர்கள் ,ஊழியர்கள் கலந்துகொண்டனர்