பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான வெகுமதி வழங்கும் நிகழ்வு

 (லியோன்)

மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான வெகுமதி வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா  அதிபர் தலைமையில் மட்டக்களப்பு  நடைபெற்றது .


பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தரவின் சிந்தனைக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்களினால் சேவை திறனை  பாராட்டும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யடவர ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா  அதிபர் W J . ஜாகொட ஆராய்ச்சி தலைமையில் உத்தியோகத்தர்களுக்கான வெகுமதி  வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் அகில இலங்கை ரீதியல் சிங்கள் மொழியில் பரீட்சையில் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டன் பொலிஸ் உத்தியோகத்தருடைய மகனும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டு பரிசில்கள் வழங்கப்பட்டது .


இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்குமாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர்  எச் .டி .கே .எஸ் கபில  ஜயசேகர, சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் பிரிவு பொலிஸ் நிலையகளின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ,மண்முனை வடக்கு சமூக பொலிஸ் பிரிவு சிவில் குழு தலைவர்கள்  உட்பட பலரும் கலந்துகொண்டனர் .